நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட மக்கள்!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமின்றி இருப்பதை சுட்டிக்காட்டி, அதை நேரில் உரித்து காட்டிய பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அரியூர் நாடு அடுத்த குழிவளவு பகுதியிலிருந்து தேவக்காய்பட்டி வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. முன்பு அமைக்கப்பட்ட 20 வருடம் பழைய சாலையின் மேல் தார் போடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சாலை மிகவும் தரமற்றதாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலையின் மேல் தார் அடுக்கு எளிதில் உரிந்து விடுவதை காட்சிப்படுத்தி, ஒப்பந்ததாரரை நேரடியாகச் சந்தித்து கடுமையாகக் கேள்வி கேட்டனர். அந்த காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.