எம்.எல்.ஏ. அடையாளப் பதக்கம் அணிந்து அண்ணாமலையார் கோயிலில் நுழைந்த ரியல் எஸ்டேட் வியாபாரி – சமூக வலைதளங்களில் பரபரப்பு!
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் புரியும் ஒருவர், சட்டமன்ற உறுப்பினருக்கான பேட்ச் அணிந்து அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவுகிறது.
கார்த்திகை தீபம் திருவிழா காரணமாக அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் மழையைப் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாஸ் வைத்திருந்தவர்களும் கூட அதிக நேரம் காத்திருந்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் லோகேஷ், சட்டமன்ற உறுப்பினர் பேட்ச் அணிந்தே கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அனைத்து பொதுமக்கள், பக்தர்கள், ஊடகவியலாளர்கள் வரை பரிசோதனை செய்து அனுமதித்த போலீசார், இவரை மட்டும் தடையின்றி அனுமதித்தது ஏன் என்ற கேள்வியை சமூக செயற்பாட்டாளர்கள் எழுப்பி வருகின்றனர்.