அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் கால்வாய்களை சுத்தம் செய்த பொதுமக்கள் – பகுதி முழுவதும் பேசுபொருள்!
சென்னை தாம்பரம் அருகே, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், கால்வாய்களை மக்கள் தாங்களே சுத்தம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிட்வா புயலின் தாக்கத்தால், சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பம்மல் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்ததால், மழைநீரோடு கழிவுநீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்தது.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும், நீண்ட நாட்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த உள்ளூர் மக்கள், அதிகாரிகளுக்காக காத்திருக்காமல், தாமாகவே கால்வாய்களைத் தூர்வாரும் பணியில் இறங்கினர்.
மக்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அரசு துறைகளின் செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியதோடு, பொதுமக்களின் முன்முயற்சியாகவும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.