சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் – திருவான்மியூரில் பதற்றம்!
சென்னை திருவான்மியூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்ததால் அங்கு சில நேரம் பதற்றமான சூழல் உருவானது. நீலாங்கரை பாரதியார் நகரைச் சேர்ந்த அருணாசலம் என்ற இளைஞர், கார் மோதியதில் துயரமான முறையில் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் பிடிபட்டுவிட்டார் என்று போலீசார் அறிவித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் அமைதியாக அங்கிருந்து வெளியேறினர்.