கனமழையால் ஆற்காடு சாலை குழி–குண்டுகளால் பாதிப்பு
சென்னை கோடம்பாக்கம்–ஆற்காடு சாலை, தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக பல இடங்களில் குழி, குண்டுகளால் சேதமடைந்து, அந்த வழியாகப் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
வடபழனியில் இருந்து அண்ணா சாலையை நோக்கி செல்லும் இந்த முக்கிய சாலையை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் தொடர்ச்சியான மழை பெய்ததால், சாலையில் நீர் தேங்கி, பாதை முழுதும் சமநிலையற்ற நிலையில் உள்ளது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக இந்தச் சாலை மோசமான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டும் வாகன ஓட்டிகள், பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன் சாலை உடனடியாக புதுப்பிக்கப்பட்டு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.