திருப்பரங்குன்றம் மலை தீபம்: HR&CE மேல்முறையீடு மனு தள்ளுபடி – நூற்றாண்டு பழமையான மரபுக்கு நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.
கடந்த நூறு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் தீபம் ஏற்ற மரபு இந்த தீர்ப்பால் மீண்டும் சட்டரீதியான உறுதிப்படுத்தலை பெற்றுள்ளது என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மாற்ற கோரி HR&CE சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பு காரணங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிடுவதோடு, முன்னைய உத்தரவை நிலைநிறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம், திருப்பரங்குன்றம் மலை மீது திட்டமிட்டபடி இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.