தவெக தலைவர் விஜயை குறித்த செங்கோட்டையனின் கருத்து மிகவும் நகைச்சுவையாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊடகங்களுக்கு பேசிய அவர்,
“எம்ஜிஆரின் அரசியல் நோக்கமும், விஜயின் கொள்கைகளும் என்ன என்பது செங்கோட்டையனுக்கு தெரியாதா? அவர் கூறிய பேச்சு மிகவும் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது,” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சேகர்பாபுவுடன் ஆலோசித்து முடிவெடுத்த பிறகே செங்கோட்டையன் தவெகாவிற்கு சேர்ந்ததாகவும், உதயநிதியை முதல்வராக உருவாக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், மத்திய அரசின் திட்டங்களுக்கு இடையூறு செய்வதே ஸ்டாலின் அரசு மேற்கொள்ளும் முக்கிய வேலையாகிவிட்டது எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.