திருவள்ளூர் மீஞ்சூரில் குடியிருப்புகள் சுற்றி வெள்ளம் – மக்கள் துன்பத்தில்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, வீடுகளும் தெருக்களும் மழைநீரால் சூழப்பட்டு, உள்ளூர் மக்கள் பெரும் சிரமத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கடுமையான மழை அந்தப் பகுதிகளில் பெய்ததால், குடியிருப்பு மண்டலங்கள் அனைத்திலும் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலணி பகுதியில், வீடுகளுக்குள் கூட வெள்ளநீர் நுழைந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்களின் தினசரி வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டு, சமைப்பதற்கும், வெளியே செல்வதற்கும் கூட சிரமம் ஏற்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தாங்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையைப் பொருட்படுத்தாமல் அரசு உதவி எதுவும் கிடைக்கவில்லை என்றும், உடனடியாக வெள்ளநீர் வடிகாலில் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.