திருப்பரங்குன்ற தீபத்தூணில் உடனடியாக தீபம் ஏற்ற வேண்டும் – இந்து முன்னணியினர் மனு
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் உடனடியாக தீபமேற்ற வேண்டும் என இந்து முன்னணியினர் கோயில் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தீபமேற்றும் பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டுமெனவும், தீபம் ஏற்ற தேவையான நெய்யை தாங்களே வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயில் நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.