இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் காலை முதல் தொடர்ந்து பெய்த மழை, அங்கு வாழும் மக்களின் தினசரி நடவடிக்கைகளை பாதித்தது.
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால், சென்னை நகரம் முழுவதும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டன.
மழை இடைவிடாமல் பெய்ததால் வேலைக்குச் செல்லும் மக்கள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.