டிட்வா புயலின் தாக்கம் – ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள்!

Date:

டிட்வா புயலின் தாக்கம் – ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள்!

டிட்வா புயலின் பின்விளைவாக, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாமல் இருப்பதால், 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

டிட்வா புயல் உருவானதை அடுத்து, கடலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 24ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுரை வழங்கியது.

இதையடுத்து, கடலூர் மாவட்டத்திலுள்ள 49 மீனவக் கிராமங்களில் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மீன்பிடிக்கு செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலை தொடர்ந்ததால், ஒரு வாரமாக மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டதோடு, மீன்பிடித் தொழிலின் மீது சார்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி – பரபரப்பு!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி – பரபரப்பு! நாடாளுமன்றக் கூட்டத் தொடர்...

இனி வேலைக்கு செல்லுவது விருப்பம் மட்டுமே ஆகும்! – 20 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறும்?

இனி வேலைக்கு செல்லுவது விருப்பம் மட்டுமே ஆகும்! – 20 ஆண்டுகளில்...

சென்னை : 10 மாதங்களாக நின்றுவிட்ட பாலம் பணிகள்

சென்னை : 10 மாதங்களாக நின்றுவிட்ட பாலம் பணிகள் சென்னை அரும்பாக்கம் பகுதியில்...

மதுரவாயல் சாலையில் வெள்ளத்தால் சிக்கிய போக்குவரத்து!

மதுரவாயல் சாலையில் வெள்ளத்தால் சிக்கிய போக்குவரத்து! தொடர்ச்சியாக பெய்த மழையின் தாக்கத்தால் சென்னையை...