திருவாரூர்: நீரில் சிக்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் மனவேதனை!
திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் நீரில் முழுகி, விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டிட்வா புயலின் தாக்கத்தால், திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இடைவிடாத மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
அதேபோல் காவனூர், கருப்பூர், சூரனூர் உள்ளிட்ட விவசாயப் பகுதிகளில் திடீரென வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டன.
இதனால் கவலைமிகு நிலையில் இருக்கும் விவசாயிகள், வடிகால் பாதைகள் சரியாக சுத்தம் செய்யப்படாததே மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் என கூறி குற்றம்சாட்டுகின்றனர்.