SIR தொடர்பான திமுக மனுவை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு மனு
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள S.I.R செயல்முறைக்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை, அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில்பிரமாணப் பத்திரம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனு உண்மைக் காண்பதற்கான ஆதாரமின்றி, வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும், விசாரணைக்கு ஏதுவல்லது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், S.I.R நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற மறைமுக நோக்கத்துடனே இந்த மனு தொடரப்பட்டுள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.