டிட்வா புயலின் தாக்கத்தால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஆலமன்குறிச்சி பகுதியில், முத்துவேல் வசிக்கும் வீட்டின் சுவர் மழை காரணமாக திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். சுவர் இடிந்த சத்தம் மற்றும் அவர்களின் அலறல் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நால்வரையும் மிகக் கடுமையான காயங்களுடன் வெளியே கொண்டு வந்தனர்.
அனைவரும் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், முத்துவேலின் இளைய மகள் ரேணுகா தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார்.
மீதமுள்ள மூவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.