ஆளுநர் ஆர். என். ரவி முன்வைத்த பரிந்துரையை ஏற்று, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் ‘ராஜ் பவன்’ பெயர் இனிமேல் ‘மக்கள் பவன்’ என மாற்றப்பட உள்ளது.
நாடு முழுவதும் ஆளுநர்களுக்கான அதிகாரப்பூர்வ இல்லமாக விளங்கும் ராஜ் பவனின் பெயரை மாற்றும் முன்மொழிவு, குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. அப்போது, ராஜ் பவன் என்ற பெயரை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, ஆளுநர் மாளிகைகளின் பெயரை ‘ராஜ்பவன்’ என்பதிலிருந்து ‘லோக் பவன்’ அல்லது ‘மக்கள் பவன்’ என மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகைகளும் இனிமேல் ‘மக்கள் பவன்’ என்ற புதிய பெயரால் அழைக்கப்படும்.