அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே தகவல்

Date:

அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே தகவல்

பாம்பன் ரயில் பாலம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால், ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கமானபடி தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டிட்வா புயலின் தாக்கத்தால், பாம்பன் ரயில் பாலம் பகுதியில் மணிக்கு 65 கிமீக்கு மேல் பலத்த காற்று வீசியதால், நேற்று முதல் அந்த பாலம் வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ரயில்கள் ராமநாதபுரம்–மண்டபம் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இன்று மதியம் பாலத்தில் சோதனை ரயில் இயக்கம் நடைப்பெற்றது. அதன் பின்னர், பாம்பன் பாலப் பகுதியில் காற்றின் வேகம் கணிசமாக குறைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது மணிக்கு 42.5 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே காற்று வீசுவதால், ராமேஸ்வரம் வரை ரயில்களை இயக்குவதற்கு தடையில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன்படி சென்னையிலிருந்து வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சேதி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி–ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ராமேஸ்வரத்தைத் தொடக்கமாகக் கொண்ட அனைத்து ரயில்களும் இன்றிலிருந்து வழக்கம்போல இயக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...