தூய்மை பணியாளர்களை புறக்கணிக்கிறது திமுக அரசு: உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி விமர்சனம்
தூய்மை பணியாளர்களின் நலனில் கவனம் செலுத்தாமல் திமுக அரசு செயல்படுகிறது என உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி குற்றம் சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பணி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூரில் 4 பெண் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் அமர்ந்து போராடி வருகிறார்கள் என்றும், இந்நிலையைக் குறித்து அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.