இலங்கை அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் “டிட்வா” என்ற பெயரில் புயல் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக அந்த பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. அதன் தொடர்ச்சியாக, அது புயல் நிலைக்கு உயர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புயலின் மையம் தற்போது சென்னையிலிருந்து தெற்குத் தென்கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அடுத்த 48 மணி நேரங்களில், புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு “டிட்வா” என பெயரிடப்பட்டுள்ளது.