அர்ஜென்டினாவில் வருடாந்திரமாக நடைபெறும் புத்தகக் கடைகள் இரவு திருவிழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
நாடுகள் முழுவதும் மக்கள் இன்று செல்போன், கணினி போன்ற சாதனங்களுடன் அதிக நேரத்தை கழிப்பதால், புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது. இதற்கிடையே அர்ஜென்டினா அரசு மற்றும் புத்தகக் கடைகள், வாசிப்பை மீண்டும் மக்களிடையில் பிரபலப்படுத்த இந்த திருவிழாவை ஏற்பாடு செய்கின்றன.
இந்த ஆண்டின் திருவிழா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்றது. இதில் பல எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன. சிறுவர்கள் முதல் முதியோருவரை ஏராளமானோர், சலுகை விலையில் கிடைத்த புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கினர்.