தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
விவசாயிகளின் சாகுபடி பரப்பை உயர்த்தவும், இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே தோட்டக்கலைத் துறைக்கு ஆண்டுதோறும் சுமார் ₹136 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால், இந்த ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டங்கள், தேநீர்/உணவு செலவுகள், வாகனப் பயன்பாடு போன்றவற்றிற்கே அதிகப்படியான கணக்குகள் காட்டப்பட்டு ஏராளமான பணம் செலவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால், அத்துறையில் தவறான செலவுகள் மூலம் ₹75 கோடி வரை அனியாயமாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது