தமிழகத்தில் SIR படிவங்களின் விநியோகம் 96.22 சதவீதம் நிறைவுற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து, தமிழகத்தைச் சேர்த்து 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கான SIR விண்ணப்பங்களை அரசு பணியாளர்கள் நேரடியாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இதுவரை 96.22% படிவங்கள் வாக்காளர்களிடம் சென்றடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
மாலை 3 மணிவரை கிடைத்த கணக்கின்படி, மாநிலம் முழுவதும் 6 கோடி 41 லட்சம் 14 ஆயிரத்து 587 வாக்காளர்களுக்கு SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.