தமிழகத்தில் தகுதியான வாக்காளர்களை எந்த காரணமும் கூறாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
“வாக்காளர் பெயரை நீக்குவதற்கான சரியான காரணம் அவசியம். மாநிலம் முழுவதிலும் 6 கோடி 16 லட்சம் வாக்காளர்களுக்கு SIR படிவம் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
SIR படிவங்களை வழங்குவதற்கான காலக்கெடுவில் மாற்றம் செய்யப்படாது என்றும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ள குடியேறிகள் கூட தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் வாக்காளர் பட்டியலில் சேர முடியும் என்றும் தெரிவித்தார். இதுவரை பிற மாநிலங்களைச் சேர்ந்த 869 பேர் தமிழகத்தில் வாக்காளர் உரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர் எனவும் கூறினார்.
வாக்காளர் விவரங்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. மேலும், ஒருவரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அதற்கான தெளிவான காரணம் அவருக்கு அறிவிக்கப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.