விருதுநகர் மாவட்டம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களை அச்சுறுத்தி பணம் பறித்த சம்பவத்தில், மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொட்டியாங்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகச் செயல்படும் சின்னராஜ் மற்றும் விற்பனையாளராக உள்ள சரவணன், கடந்த 20ஆம் தேதி இரவு கடையை மூடி, தின வருவாய் பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களது வழியில் மூவர் திடீரென தடுப்பதோடு, ஆயுதங்களை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த ரூ. 1,09,000 பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார், குற்றத்தில் தொடர்புடைய முத்துமணி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.