இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறியதாவது:
“இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களைக் கடந்தும் நடந்துள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிக மற்றும் பொருளாதார தொடர்புகள் சில சிக்கல்களை ஏற்படுத்தினாலும், நாங்கள் இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.”
கெவின் ஹாசெட் மேலும் கூறினார்:
“இந்தியா மற்றும் அமெரிக்கா நல்ல நண்பர்கள்; இரண்டு நாடுகளும் நெருக்கமான பொருளாதார உறவை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையை தரும்.”
இந்த ஒப்பந்தம் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக மதிப்பிடப்படுகிறது.