மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பொறுப்பாளர்களைக் கண்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் அப்போது பால் தரத்தை சோதித்து, உரிமையாளர்களுக்கு உடனடி ஒப்புதலை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின், குலசேகரன்கோட்டையில் உள்ள விவசாயிகளின் மாட்டு பண்ணைக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆனால், மாடு வாங்க வங்கிக் கடன் கேட்ட நபரிடம் “தொலைத்து விடுவேன்” எனக் கூறிய அவரது மரியாதை குறைவான பேச்சு, அப்பகுதியில் உள்ள மக்களில் அதிருப்தி உருவாக்கியுள்ளது.