மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஓடும் ரயிலில், கெட்டில் பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண் தொடர்பாக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கப் போகும் என அறிவித்துள்ளது.
ஏசி பெட்டியில் பயணித்த அந்த பெண், மொபைல் சார்ஜர் பாயிண்டில் கெட்டிலை இணைத்து நூடுல்ஸ் சமைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றிய வீடியோ, மற்ற பயணிகளால் பதிவேற்றப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
பலரும் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் ரயில்வே சட்டம் 147 பிரிவு 1ன் படி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஓடும் ரயிலில் கெட்டில் பயன்படுத்துவதை ஆபத்தான செயலாக காட்டி, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படம் பகிரப்பட்டது.