தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, காற்றழுத்தம் குறைந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருந்தது. சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை அதிகரித்தது.
இதனால் திருவேங்கடம் சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து கெட்ட துர்நாற்றம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையான சிரமத்தில் இருந்தனர்.
பொதுமக்கள் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை விரைவாக செயல்படுத்த, எதிர்காலத்தில் நீர் தேக்கம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.