துருவ் விக்ரம் பைசன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களிடையே நேர்மறையான வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை 70 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ள இந்த திரைப்படம், இப்போது ஓடிடிக்கு வந்துசேர உள்ளது.
அதன்படி, பைசன் நவம்பர் 21-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்காக வெளியாகும் என்று உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




