“தங்களின் தலைவரே முன்வைத்ததால், எஸ்.ஐ.ஆர்.யை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால் உண்மையில், மிக அதிகமாக வீணாகி போவது அவரின் வாக்குகள்தான்,” என்று நாதகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போலி வாக்குகள் போடப்பட்டதும், பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? ஏன் அதை தடுக்க முடியவில்லை? ஜனநாயக நாட்டில் மக்கள் கொண்டிருக்கும் மிகப்பெரிய உரிமை வாக்குரிமை. அதை இவ்வளவு எளிதாக, ‘போய் போட்டுக்கொள்’ என்று கட்டாயப்படுத்தும் நிலை உருவானால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?” என்று கேள்வி எழுப்பினார்.