ரேஷன் கடைகள் மூலம் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் டிசம்பர் 16க்குள் பதில் சமர்ப்பிக்காதின், சுகாதாரம் உள்ளிட்ட மூன்று துறைகளின் செயலர்கள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா தாக்கல் செய்த பொது நல மனுவில்,
- பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதார பாதுகாப்பு மிக முக்கியமானது,
- சந்தையில் நாப்கின்கள் அதிக விலை கூடியதால் ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் அதை வாங்க முடியாத நிலை இருப்பது,
- இதனால் மாற்று மற்றும் பாதுகாப்பற்ற முறைகள் பயன்படுத்தப்படுவதால் ஆரோக்கியப் பிரச்சினைகள் உருவாகின்றன,
- பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்கும் திட்டம் இருந்தாலும், ரேஷன் கடைகள் மூலம் பெண்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் நாப்கின்கள் வழங்க எந்த திட்டமும் தமிழகத்தில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டது.
எனவே, கிராமப்புற ஏழை பெண்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் நாப்கின்களை வழங்க வேண்டும் என அவர் கோரினார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டபோது, ஏற்கனவே இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டும் பதில் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அதனால், டிசம்பர் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யாதின்,
- சமூக நலத் துறை,
- உணவுப் பொருள் வழங்கல் துறை,
- சுகாதாரத் துறை
என மூன்று துறைகளின் செயலர்களும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரித்து, வழக்கு அடுத்த தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.