சென்னையில் ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லத்திற்காக வழங்கப்பட்ட நிலம், சமூக சேவை நிபந்தனைகளை மீறி வணிகத்திற்காக பயன்படுத்தப்பட்டதால், அந்த 3.12 ஏக்கர் நிலத்தை அரசு மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட விளக்கத்தில் கூறப்பட்டது:
அம்பத்தூர் – ஒரகடம் பகுதியில் உள்ள அன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு, சமூக நலச் செயல்பாடுகளுக்காக அரசால் 3.12 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
ஆனால், சமூக நல நோக்கத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை விதிமுறைகளை மீறி வணிக பயன்படுத்துக்கு மாற்றியமைத்ததால், அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில், மாவட்ட நிர்வாகம் கடந்த 14 ஆம் தேதி அந்த நிலத்தை அதிகாரப்பூர்வமாக அரசு வசமாக மீட்டுள்ளது.
வருவாய் துறையின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, இச்செயல் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலம் தற்போது முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.