வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Date:

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை புதுச்சேரி கடும் வெப்பத்தில் தள்ளாடியது. அதன் பின்னர் அக்டோபர் 15 இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தட்பவெப்ப நிலை மாறியது. இதற்கிடையில் அக்டோபர் 27 அன்று வங்கக்கடலில் ‘மோந்தா’ புயல் உருவாகி புதுச்சேரியை தாக்கலாம் என வானிலை மையம் முன்னறிவிப்பு வழங்கியது. ஆனால் புயல் பாதை மாறி ஆந்திராவை நோக்கிச் சென்றது.

அதுவும் கண்டும், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் கனமழை தொடர்ந்தது. பல ஏரிகள், குளங்கள் நிரம்பியதோடு, அருகிலுள்ள மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புதுச்சேரியிலுள்ள 26 படுகை அணைகளும் நிரம்பின.

நவம்பர் தொடக்கத்தில் வெப்பம் அதிகரித்திருந்தாலும், கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வந்தது. நேற்றிரவு முதல் தொடர்ந்து லேசான மழை புரளத்தொடங்கியது.

இந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்ததாவது:

“வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இன்று மற்றும் நாளை கனமழையும் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 55 கி.மீ. வரை பலமாக வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி பகுதிக்குப் ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவசியமில்லாமல் வெளியே வராமல், அரசு வழங்கும் அறிவுறுத்தல்களை மட்டுமே நம்பி பின்பற்ற வேண்டும். சந்தேகம் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் 1077, 1070, 112 ஆகிய எண்கள் அல்லது 94889 81070 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிவ தாண்டவத்தில் திளைக்கும் பாலகிருஷ்ணா

2021-இல் வெளிவந்து வெற்றி பெற்ற போயபதி ஸ்ரீனு இயக்கிய ‘அகண்டா’ படத்தில்,...

தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது: விக்கிரமராஜா அறிவுறுத்தல்

தமிழக அரசால் தடைக்கப்பட்ட பொருட்களை கடைகளில் விற்க வேண்டாம் என்று...

விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு விவகாரம்: செல்வப்பெருந்தகை விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தாரா...

தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை...