பாஜக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை அமச்சராக இருந்த ஆர்.கே.சிங், கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாஜக தலைமையினால் இடைக்காலமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிஹார் மாநிலத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆர்.கே.சிங், அர்ரா தொகுதியின் முன்னாள் எம்.பி.யும் ஆவார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது ஒரு நாளே ஆகும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுத்து பாஜக மேலிடம் சஸ்பென்ஷன் உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதே காரணத்தால், பிஹார் எம்எல்சி அசோக் அகர்வால் மற்றும் கடிஹார் மாநகராட்சி மேயர் உஷா அகர்வாலும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து விளக்கம் கோரி மாநில பொறுப்பாளர் அர்விந்த் சர்மா நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைமைக்கு எதிராக ஆர்.கே.சிங் தொடர்ந்து விரோத கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே அவரை சஸ்பெண்ட் செய்ய காரணமானதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நடவடிக்கைக்கு பின் ஆர்.கே.சிங் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.