மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவன தலைமைச் செயலாளர் சந்தோஷ் ஐயர் கூறியதாவது, இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் சராசரியாக 50,000 சொகுசு கார்கள் விற்பனையாகும் நிலையில், அதில் 20,000 கார்கள் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகும்.
புனே நகரில் 100 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்ட ஆலையில் அனைத்து வகை பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார கார்கள் தயாரிக்கப்படுகின்றன. 800 பேரில் சுமார் 30% பெண்கள் பணியாற்றுகின்றனர்.
சந்தோஷ் ஐயர் குறிப்பிட்டதாவது: கடந்த 5 ஆண்டுகளில் சொகுசு கார்கள் விலை இரட்டிப்பு ஆனாலும் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் வாடிக்கையாளர்கள் 15% வரை அதிகரித்துள்ளனர். மின்சார கார்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும்.
டீசல் கார்கள் விற்பனை 40% அதிகரித்து, கோவை உள்ளிட்ட 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் விற்பனை வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் எஸ்யுவி கார்கள் விட செடான் வகை கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.