பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இரண்டில் மூன்றாம் பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருவதையடுத்து, அந்த மாநிலத்தில் கூட்டணி ஆட்சி தொடரும் நிலை உருவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பிஹார் தேர்தல் முடிவுகள் ஒரு கட்சி வெற்றியை மட்டும் காட்டவில்லை; இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரும் வெற்றியாக திகழ்கிறது.
யார் முதல்வராக வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் வரக்கூடாது என்பதை பிஹார் மக்கள் தெளிவாகத் தீர்மானித்துள்ளனர். அதன்படி, பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்கு வழங்கியுள்ளனர்.”
மேலும் அவர் கூறியதாவது:
- நரேந்திர மோடியின் ஆட்சி பிஹார் மக்களுக்கு மிகத் தேவையானது என்பதை இவ்வெற்றி காட்டுகிறது.
- அவதூறு பிரச்சாரம், கற்பனைக் குற்றச்சாட்டுகள், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை பிஹார் தேர்தல் நிரூபித்துள்ளது.
- மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சி, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை முன்னிட்டு வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
- இது இரட்டை இன்ஜின் அரசின் வெற்றி. பிரதமர் மோடியின் திட்டங்களை மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறம்பட செயல்படுத்தியதின் பலனே இந்த வெற்றி.”
அதே நேரத்தில்,
தேர்தல் கமிஷனை குறிவைத்து செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள், போலி வாக்காளர் விபரங்களை நீக்கியதற்காக நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரங்களும் பிஹார் மக்களின் தீர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.