மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.12 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சட்டப்பேரவையில் 2025–26 காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டபடி, இவ்வாகனங்கள் தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை மற்றும் மதுரை மாநகரங்களில் ரோந்துப் பணி மேற்கொள்வதுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் நா. முருகானந்தம், உள்துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி க. வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.