தடாகக் கட்சியின் தலைவர் மீது டெல்லி மக்களால் திருப்தி குறைவாக இருக்கிறது. மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லாத போது, கடந்த மக்களவைத் தேர்தலில் தடாகக் கட்சியை பேசும் இடத்தில் ‘பிரதர் மவுன்ட்’ தலைவரை முன்னிறுத்தியிருந்தனர்.
ஆனால், இப்போது மாளிகைக் கட்சியுடன் கூட்டணி உருவாகிய நிலையில், புதுத்தெம்போடு செயல்பட வேண்டிய கட்சி, பழைய தெம்பையும் இழந்து சுரத்தில்லாமல் செயல்படுவதாக தெரிகிறது. மத்திய தலைமையின் விசாரணையில், “ஜில்லா அளவில் பொறுப்பில் உள்ள பெரும்பாலானவர்கள் அவரால் நியமிக்கப்பட்டவர்கள்; அதனால் போதிய ஒத்துழைப்பு இல்லை” என்பது காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை கவனித்த மத்தியப் புள்ளிகள், ‘பிரதர் மவுன்ட்’ தலைவரை மாற்ற வேண்டும் என முன்பு அழுத்தம் கொடுத்த தமிழக ‘சங்க’ புள்ளிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற மந்த நிலை தொடர்ந்தால், தொடரும் தேர்தலில் திட்டமிட்ட முடிவை அடைய சிரமம் ஏற்படும் என மத்தியப் புள்ளிகள் கவலைப்படுகிறார்கள். இதையடுத்து, மீண்டும் ‘பிரதர் மவுன்ட்’ தலைவரிடம் பொறுப்பை ஒப்படைத்து தேர்தலைச் சந்திப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.