சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளின் தாக்கத்தால் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தகவலின்படி, தங்கத்தின் விலை உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி, தங்கம் விலை ரூ.97,600 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன் பின்னர் விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் நேற்று ஆபரணத் தங்க விலை மீண்டும் உயர்ந்து ரூ.93 ஆயிரத்தைத் தாண்டியது.
ஒரு பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.11,700 ஆகவும் விற்கப்பட்டது.
அதே நேரத்தில், 24 காரட் தங்கம் ரூ.1,02,104 ஆக இருந்தது.
வெள்ளி விலையும் சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.170 ஆனது. அதேபோல், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1.70 லட்சம் ஆகியது.
நிபுணர்கள் தெரிவிப்பதாவது, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மத்திய வங்கிகளின் தங்கக் கையிருப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்க விலையில் மேலும் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.