சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 3 சிறப்பு ரயில்கள்

Date:

சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 3 சிறப்பு ரயில்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறவுள்ள மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பயண வசதிக்காக தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இதன்படி, காக்கிநாடா டவுன் – கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண் 07109) நவம்பர் 17, டிசம்பர் 1, 8, 15, 22, 29 மற்றும் ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

மறுமார்க்கமாக, கோட்டயம் – காக்கிநாடா டவுன் இடையே (எண் 07110) நவம்பர் 18, டிசம்பர் 2, 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் ரயில் இயக்கப்படும்.

இரு ரயில்களும் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாகச் செல்லும்.

அத்துடன்,

  • ஹசூர் சாஹிப் நாந்தேட் – கொல்லம் இடையே
  • சார்லபள்ளி – கொல்லம் இடையே

    தனித்தனி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 10) காலை 8 மணியிலிருந்து தொடங்கியுள்ளது என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னை புத்தகக் காட்சியில் தினசரி நூல் ஆசிரியர் கலந்துரையாடல் – விஜயபாரதம் அரங்கில் ஏற்பாடு

சென்னை புத்தகக் காட்சியில் தினசரி நூல் ஆசிரியர் கலந்துரையாடல் – விஜயபாரதம்...

விண்வெளியில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் – இன்றைய ஏவுதல்

விண்வெளியில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் – இன்றைய ஏவுதல் இன்னும் சில...

ஈரானில் ஆட்சி மாற்றம்? – போராட்டம் தீவிரம், இணைய சேவை துண்டிப்பு

ஈரானில் ஆட்சி மாற்றம்? – போராட்டம் தீவிரம், இணைய சேவை துண்டிப்பு ஈரானில்...

கொடைக்கானலில் சாரல் மழை – பொதுமக்கள் வாழ்வியல் பாதிப்பு

கொடைக்கானலில் சாரல் மழை – பொதுமக்கள் வாழ்வியல் பாதிப்பு கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார...