எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை – சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல் நடைபெறுகிறது: இந்தியன் ஆயில் விளக்கம்
சென்னை பிராந்தியத்தில் உள்ள எந்த இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்டிலிங் ஆலையிலும் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) தெளிவுபடுத்தியுள்ளது.
நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
“சென்னை பிராந்தியத்திலுள்ள அனைத்து எல்பிஜி பாட்டிலிங் ஆலைகளும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. சிலிண்டர் நிரப்புதல் மற்றும் விநியோகம் எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமுமின்றி தங்களுக்கான சிலிண்டர்களை பெறலாம்,” என தெரிவித்துள்ளது.
மேலும்,
“அனைத்து ஆலைகளிலும் போதுமான அளவு எல்பிஜி இருப்பு உள்ளது. இண்டேன் விநியோகஸ்தர்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வணிக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு விநியோகஸ்தரும் போதுமான சிலிண்டர் இருப்பை வைத்துள்ளனர்,” எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதனுடன்,
“இந்தியன் ஆயில் எப்போதும் தேச நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எல்பிஜி சிலிண்டர்கள் நம்பகமாகவும், நேர்மையாகவும் கிடைப்பதை உறுதி செய்வது எங்கள் பிரதான கடமை,” எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.