மாவோயிஸ்டுகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 3 ஆக குறைந்துள்ளன: மத்திய அரசு

மாவோயிஸ்டுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்திய மாவட்டங்களின் எண்ணிக்கை 6-இல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைச் சார்ந்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மார்ச் 31, 2026-க்குள் முற்றிலும் ஒழிக்க அரசு உறுதி செய்துள்ளது. இதற்காக எடுத்த அரசின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் 12-இல் இருந்த அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்கள் தற்போது 6 ஆக குறைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு, சத்தீஸ்கரின் பீஜப்பூர், கான்கர், நாராயண்பூர், சுக்மா, ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி ஆகிய 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை பெற்றதாகக் குறிப்பிடப்பட்டன. இப்போது, சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர், நாராயண்பூர், சுக்மா மாவட்டங்கள் மட்டுமே அதிக பாதிப்படைந்த மாவட்டங்களாக உள்ளன.

அதேபோல், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் வகைப்பாட்டில் இருந்த 18 மாவட்டங்கள் தற்போது 11 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இடதுசாரி தீவிரவாதிகள் 312 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 836 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 1,639 பேர் சரணடைந்துள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box