டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

Date:

டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய அமலாக்கத் துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத் துறை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தியது. இதற்கு எதிராக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “அமலாக்கத் துறைக்கு ஆதாரமின்றி சோதனை, பறிமுதல் செய்ய அதிகாரம் இல்லை” எனக் கூறி, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், அந்த உத்தரவை மீறி அமலாக்கத் துறை மேல்முறையீட்டு அதிகாரி சம்மன் அனுப்பியதாகக் கூறி, ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் விகாஸ் குமாரை ஆஜராக உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு, “இப்போதைக்கு உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...