கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை
உக்ரைனைச் சேர்ந்த கிரிப்டோ வர்த்தகர் கோஸ்ட்யா குடோ, கடந்த 11-ம் தேதி தனது லம்போர்கினி உருஸ் காரில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதை தற்கொலையாகக் கருதிச் சாத்தியமா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடோ இறப்பதற்கு முன்பு நிதி பற்றாக்குறை காரணமாக மனச்சோர்வு நிலையில் இருந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் சீன இறக்குமதிகள் மீது 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இதனால் கிரிப்டோ கரன்சி சந்தை பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டது.
இதனால், குடோவுக்கு 19 பில்லியன் டாலர் வரை நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதே காரணத்தால் அவரது மரணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என சந்தேகம் உள்ளது. டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு, சர்வதேச சந்தையில் பிட்காயின் மதிப்பு 8% சரிந்து குறைந்தது குறிப்பிடத்தக்கது.