கிரிக்கெட்டில் சூப்பர் ஓவருக்கான விதிகள் – முழு விளக்கம்
டி20 மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், ஆட்டம் டை ஆகும் பட்சத்தில் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படுகிறது.
சூப்பர் ஓவரின் அடிப்படை விதிகள்
- ஒவ்வொரு அணிக்கும் ஒரு ஓவர்
- இரு அணிகளும் தலா ஒரு ஓவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஈடுபட வேண்டும்.
- பேட்டிங்கில் ஒரு அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ஆனால் இரு விக்கெட்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- மாற்று (concussion substitute) வீரரும் பேட்டிங் செய்ய முடியும்.
- விக்கெட் இழப்பு மற்றும் இன்னிங்ஸ் முடிவு
- பேட்டிங் செய்யும் அணி 2 விக்கெட்களை இழந்தால், அந்த அணியின் சூப்பர் ஓவர் இன்னிங்ஸ் முடிவடைகிறது.
- டார்ஜெட் ரிவியூ சிஸ்டம் (DRS)
- சூப்பர் ஓவரில் ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு DRS வழங்கப்படுகிறது.
- DRS பயன்படுத்திய பிறகு முடிவு மாறாவிட்டால், அதை மீண்டும் பயன்படுத்த முடியாது.
- சூப்பர் ஓவர் டை ஆட்டம்
- சூப்பர் ஓவரிலும் டை ஆகினால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும்.
- சூப்பர் ஓவர்களை நடத்த ஒருமணி நேரம் ஒதுக்கப்படும்; இதை முடியாவிட்டால் கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும்.
- இன்னும் முடிவு வராவிட்டால், ஆட்டம் டை என அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
- வானிலை காரணங்கள்
- வானிலை காரணமாக சூப்பர் ஓவர் நடத்த முடியாவிட்டால், அந்த நிலை மேலே கூறிய விதிகள் போலவே பின்பற்றப்படும்.
- நாக் அவுட் சுற்றுகளில் சூப்பர் ஓவர் முடியாவிட்டால், அதிக புள்ளிகளை பெற்ற அணி வெற்றி அறிவிக்கப்படும்.
- இரு அணிகளும் சம புள்ளிகளை பெற்றிருந்தால், நிகர ரன் ரேட் (NRR) பயன்படுத்தப்படும்.
- இதனுடன், முன்னோட்டங்களில் ஏற்படும் அபராதம், இடைநீக்க நேரம், எச்சரிக்கை போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
- சூப்பர் ஓவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வரிசை
- பிரதான ஆட்டத்தில் 2-வது பேட் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்யும்.
- 2-வது சூப்பர் ஓவர் நடந்தால், முதலில் பேட் செய்த அணி முதலில் பேட் செய்யும்.
- சூப்பர் ஓவரில் பந்து வீச்சுக்கு பந்துகளை அணிகள் தங்களால் தேர்வு செய்யலாம்.
- பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் விதிகள்
- முதல் சூப்பர் ஓவரில் ஆட்டமிழந்த பேட்ஸ்மேன் 2-வது சூப்பர் ஓவரில் பேட் செய்ய முடியாது, ஆனால் 3-வது சூப்பர் ஓவரில் பங்கேற்க முடியும்.
- ஒரு சூப்பர் ஓவரில் பந்து வீசிய பந்து வீச்சாளர் அடுத்த சூப்பர் ஓவரில் பந்து வீச முடியாது.
Facebook Comments Box