எம்சிசியின் 33-வது விதி: ‘ஹேண்டில் தி பால்’ என்ன சொல்கிறது?

கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை உருவாக்கும் பொறுப்பு, இங்கிலாந்தின் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) என்பதற்கே சொந்தமானது. அந்த எம்சிசி வகுத்த விதிமுறைகளில் 33-வது விதி ‘ஹேண்டில் தி பால்’ எனப்படுகிறது.

இந்த விதிமுறையின்படி, பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் வீசிய பந்தை, தனது கைகளால் மட்டையைப் பிடிக்காமல் தொடுமிடத்து, அது “பந்தைக் கையாண்டல்” எனக் கருதப்படும். இதனால், நடுவர் அவரை அவுட் என அறிவிக்கலாம்.

அதாவது, பேட்ஸ்மேன் பந்தை மட்டையால் விளையாடாமல், விரும்பித் தனது கையால் பந்தை தடுத்தால், அது “ஹேண்டில் தி பால்” விதி மீறல் ஆகும். எனினும், பேட்ஸ்மேன் தன்னை காயத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பந்தை கையால் தொட்ந்தால், அவர் அவுட் எனக் கருதப்படமாட்டார்.

இந்த வகை அவுட்டில், விக்கெட் பந்து வீச்சாளரின் கணக்கில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹேண்டில் தி பால்’ விதியின் கீழ் முதன்முதலில் ஆட்டமிழந்தவர் தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸல் என்டீன் ஆவார். அவர் 1957-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவ்விதியில் அவுட்டானார்.

இதுவரை மொத்தம் 10 வீரர்கள் இந்த விதிமுறையின் கீழ் அவுட்டாகியுள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் மட்டும் 3 வீரர்கள் இவ்வாறு ஆட்டமிழந்துள்ளனர்.

அவற்றில் முக்கியமானது, 2001-ஆம் ஆண்டு சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி. அப்போட்டியில் ஹர்பஜன் சிங் வீசிய பந்தை ஸ்டீவ் வாஹ் முதலில் மட்டையால் தடுத்து, பின்னர் ஸ்டம்பை நோக்கிச் சென்ற பந்தை கையால் தடுத்து விட்டதால் “ஹேண்டில் தி பால்” விதியின் கீழ் அவுட்டானார். அந்தப் போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த விதியின் கீழ் சமீபத்தில் ஆட்டமிழந்தவர் ஜிம்பாப்வே வீரர் சமு சிபாபா ஆவார்; அவர் 2015-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுட்டாகியிருந்தார்.

Facebook Comments Box