வருமானம் குறைந்ததால் ராஜினாமா விருப்பம்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் சதானந்தன் மாஸ்டர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதாவது:
“நான் ஒருபோதும் அமைச்சர் பதவியை நாடியதில்லை. ஆனால், அந்தப் பதவி ஏற்ற பிறகு எனது திரைப்பட வருமானம் பெரிதும் குறைந்துள்ளது. எனவே நான் அதிகம் சம்பாதித்து மக்களுக்கு உதவ விரும்புகிறேன். அதனால், அமைச்சர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தைத் தெரிவித்துள்ளேன்,” என்றார்.
மேலும், “நான் பதவியில் இருந்து விலகிய பிறகு, சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். இது கேரள அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும்,” என்றும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
Facebook Comments Box