‘கருப்பு’ எப்போது வெளியீடு? – ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெளிவான பதிலை அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“‘கருப்பு’ படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் மிகவும் அதிகம் இருப்பதால், அவற்றை முழுமையாக்க சிறிது கூடுதல் நேரம் தேவைப்பட்டது. அதனால் வெளியீடு தாமதமாகியுள்ளது.
இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கும் ஒரு முயற்சி. தயாரிப்பாளர்களான எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு இருவரும் சமீபத்தில் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இந்த தீபாவளிக்கு ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வெளியாகும். சூர்யா சார் நடனத்திலும் நடிப்பிலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தப் போகிறார்.
படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும்,” என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘கருப்பு’ படத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி, ஷிவதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஜி.கே. விஷ்ணு மேற்கொள்கிறார்; இசையை சாய் அபயங்கர் அமைக்கிறார்.