மேற்கு வங்கத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 27 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து தீவிரமாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. முக்கியமாக தெற்கு மேற்கு வங்கத்தில் தீவிர மழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் மின்னல் அடுத்தடுத்து தாக்கியதில் சில வீடுகள், மரங்கள் தீ பிடித்தன. ஒரே நாளில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் நேற்று 26 பேர் பலியாகி உள்ளனர்.
மூர்ஷிதாபாத் 10 பேர் பலியாகி இருக்கிறார்கள், அதேபோல் ஹூக்ளியில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு மிட்னாப்பூர் என்று பகுதியில் 3 பெறும், பங்குரா என்ற பகுதியில் 2 பேரும் பலியாகி உள்ளனர். இன்னும் சில இடங்களில் பல மின்னல் தாக்கி விழுந்த மரணங்கள் காரணமாக காயம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பலியான நபர்களுளின் குடும்பத்திற்கு, பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அளித்துள்ளார்.
Facebook Comments Box