பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு!

Date:

பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு!

வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி, பூண்டி (சத்தியமூர்த்தி சாகர்) நீர்த்தேக்கத்தில் மொத்த உயரம் 35 அடி என்பதில், 33.75 அடி அளவுக்கு நீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கனஅடியில், தற்போது 2,745 மில்லியன் கனஅடி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 2,600 கனஅடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், பேபி கால்வாய் வழியாக விநாடிக்கு 47 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டு, நீர்த்தேக்கத்திலிருந்து மேலும் விநாடிக்கு 2,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த விநாடிக்கு 400 கனஅடி நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி; இதில் 22.55 அடி அளவிற்கு நீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில், தற்போது 3,261 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது.

சென்னைக்கான குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 165 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஏரியில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மொத்த உயரமான 21.20 அடியில், தற்போது 19.12 அடி அளவிற்கு நீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடியில், தற்போதைய இருப்பு 2,837 மில்லியன் கனஅடி. ஏரிக்கு விநாடிக்கு 235 கனஅடி நீர் வரத்து உள்ளது; அதேசமயம், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 184 கனஅடி நீர் வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கம்பக் கால்வாய் வழியாக வந்த நீரால் பல ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரியின் மொத்த உயரம் 25 அடி; தற்போது 23 அடி அளவிற்கு நீர் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கு வரும் விநாடிக்கு 300 கனஅடி நீர் கிளியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான MRI ஸ்கேனர் – நாட்டுக்கு அர்ப்பணம்

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான MRI ஸ்கேனர் – நாட்டுக்கு அர்ப்பணம் பெங்களூருவை தலைமையிடமாகக்...

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் – 15 ஆண்டு சிறை, ரூ.29,000 கோடி அபராதம்

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் – 15...

‘பராசக்தி’ பட கதை நகல் புகார் – இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

‘பராசக்தி’ பட கதை நகல் புகார் – இயக்குநர், தயாரிப்பாளர் பதிலளிக்க...

செய்கூலி, சேதாரம் கிடையாது என்ற அறிவிப்பு – சேலத்தில் நகைக்கடையில் மக்கள் கூட்டம்

செய்கூலி, சேதாரம் கிடையாது என்ற அறிவிப்பு – சேலத்தில் நகைக்கடையில் மக்கள்...