தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு
சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பொதுக்குழு கூட்டத்தில் நடிகை கஸ்தூரி உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
“வந்தே மாதரம் முழக்கம் எழுந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த எழுச்சிமிகு பாடலுக்கு தெலங்கானா மாநிலம் மிகப்பெரிய விழாவை நடத்தியுள்ளது. ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் போன்ற தேசபக்தர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில், அந்தப் பாடலுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை,” என்றார்.
தொடர்ந்து, “திமுக அரசு எப்போதெல்லாம் சிக்கலில் சிக்குகிறதோ, அப்போதெல்லாம் இனம், பிரிவினை போன்ற விஷயங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது. தமிழ் பற்றைப் பேசாமல், திராவிடத்தையே முன்னிறுத்துகிறது. ஆனால் தமிழ் பற்று, தேசப்பற்று குறித்து பேசுவது நம்முடைய பொறுப்பு,” எனக் கூறினார்.
மேலும், “திரைத்துறை இப்போது சிலரின் கைகளில் சிக்கி இருக்கிறது. ஒரு சிறிய படம் எடுத்தால் அதை வெளியிடுவதற்கே பெரும் சிரமம். தீபாவளி போன்ற பெரிய பண்டிகையிலும் நல்ல திரைப்படம் வெளிவரவில்லை. திரைத்துறை மீண்டும் முழுமையாக செயல்பட, பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு முக்கிய பங்காற்ற வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்